சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, ‘பருத்தி வீரன்’ வெங்கடேஷ், விஜி, ‘சுப்ரமனியபுரம்’ விசித்திரன், முருகேசன், ஈஸ்வரன்வட்டார வழக்கு விமர்சனம் மற்றும் பலர் நடிக்க வட்டார வழக்கு படம்
கதைக்களம் சொந்தத்திற்குள் பகை ஏற்பட்டு அந்தப் பகை ஆண்டாண்டு காலமாக மனைவி உருபெற்று வீட்டு குத்து என்று மிகப்பெரிய பகையாக மாறுகிறது அதற்குள் ஒரு இனிமையான காதல் முடிவு சோகமானது இதுதான் படத்தின் முழு கதை நாயகன் ஏற்கனவே நாம் டூ லேட் படத்தில் பார்த்தவர் தான் இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரமாக எடுத்திருக்கிறார் அவர் உடல் மொழியும் முக பாவங்களும் அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தம் என்று தேர்ந்தெடுத்த இயக்குனர் மிகச் சரியாக வரை பயன்படுத்தியிருக்கிறார்
படம் முழுக்க வசனங்கள் இயல்பான உச்சரிப்புகள் ஆபாச வார்த்தைகள் கூட கிராமத்து வட்டார மொழியாக பேசப்படும் போது அதில் ஆபாசம் தெரியவில்லை ஒரு எதார்த்தம் தான் நமக்கு புலப்படுகிறது
நாயகி அருமையான தேர்வு இவரும் டூ லேட் படத்தின் நாயகி தான் மிகச் சிறப்பாக மிக அருமையாக தன் பங்களிப்பை வழங்கி இருக்கிறார் இவரை ஏன் தமிழ் சினிமா இன்னும் கண்டு கொள்ளவில்லை என்பது நமக்கு புரியாத புதிராக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கண்கலங்க வைக்கிறார்
உடன் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக அருமையாக தங்கள் பங்களிப்பை செய்திருக்கின்றனர் பேச்சு வழக்கு மொழி நமக்கு புதிதாக இருந்தாலும் அந்த உச்சரிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது
இயக்குனர் கிராமத்தில் வாழ்ந்தவர் என்பதால் அந்த கிராமத்தின் வட்டார வழக்கு மொழியை நம் கண் முன்னும் நம் காதுக்கும் விருந்தளித்து இருக்கிறார்
படம் முழுக்க எண்பதுகளில் வந்த இளையராஜாவின் ஹிட்டான பாடல்களை பல இடங்களில் உபயோகப்படுத்தி எண்பத்தின் காலகட்டத்திற்கு நம்மை எடுத்துச் செல்கிறார்
படத்திற்கு பின்னணி இசையும் இளையராஜா தான் இருந்தாலும் நம்மால் எண்பதுகளின் இளையராஜாவை மட்டுமே ரசிக்க முடிகிறது
வட்டார வழக்கு— கிராமத்து மண்வாசம்