spot_img
HomeNewsதூக்கு துரை விமர்சனம்

தூக்கு துரை விமர்சனம்

நடிகர் யோகிபாபு ‘தூக்குதுரை’ என்ற புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபுவுடன், இனியா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.மன்னர் வம்சத்தினை சார்ந்தவர் மாரிமுத்து. அவரது முன்னோர் ஒருவர், மக்களின் நலனுக்காக தன் தலையை துண்டித்து, அந்த ஊர் அம்மனுக்கு அளித்தவர். இதன் காரணமாக அந்த வம்சத்தை சார்ந்தவர்கள் அந்த தலையை துண்டித்து கொண்ட, மன்னனின் கிரீடத்தினை அம்மனுக்கு வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அது ஒரு நாள் காணாமல் போகிறது. ஊரில் குழப்பம் ஏற்படுகிறது. அதோடு, யோகிபாபுவின் ஆவி, ஊர் மக்களை துன்புறுத்தி வருகிறது. காணாமல் போன கிரீடம் கிடைத்ததா? யோகிபாபு ஏன் ஆவியாக அலைகிறார்? என்பதற்கு விடை சொல்லும் படமே, தூக்கு துரை படத்தின் கதை.

ஊர்த் திருவிழாவில், பயாஸ்கோப் காட்டும் நபராகவும், இனியாவை கதலிப்பவராகவும் நடித்திருக்கிறார், யோகிபாபு. தனது வழக்கமான ஒன்றிரண்டு பஞ்ச் காமெடிகளுடன் சில காட்சிகளுக்கு மட்டும் வந்து போகிறார். இனியாவை காதலிக்கும் காட்சிகளிலும் வறட்சி, அவரது காமெடி காட்சிகளும் வறட்சியாக இருக்கிறதுஅட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப் புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

Must Read

spot_img