spot_img
HomeNewsமுடக்கறுத்தான் விமர்சனம்

முடக்கறுத்தான் விமர்சனம்

மூலிகை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் கதாநாயகனுக்கு திருமணம் நிச்சயமாகி சென்னைக்கு தனது வருங்கால மனைவியுடன் புது துனி எடுக்க செல்லும் போது அங்கு தனது வருங்கால மனைவியின் சகோதரி இன் குழந்தை காணாமல் போயிருக்க அதை விசாரிக்கும் போது குழந்தை கடத்தலின்  மிகப்பெரிய விஷயம் வெளிவர அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் கதாநாயகன் களம் இறங்க இறுதியில் வெற்றி கதாநாயகன்க்கு இதுவே முடக்கறுத்தான் படத்தின் கதைச்சுருக்கம்

நாயகன் டாக்டர் வீரபாபு, தயாரித்து நடித்து இயக்கியிருக்கும் படம் ஒரு மருத்துவராக இருந்து கொண்டு இவர் திரையுலகில் தடம் பதித்திருப்பது அவரின் கலை உலக ஆசையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது கொரோனா காலத்தில் இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம் பல கொரோனா நோயாளிகளை காப்பாற்றி மக்களுக்கு சேவை செய்த வீரபாபு பல குழந்தைகளின் எதிர்காலத்தை முடக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை தடுத்து பிச்சை எடுக்கும் உங்களால் இவர்கள் படும் கஷ்டத்தை நம் கண் முன் காட்டி இது போல் நடக்குமா என்ற எண்ணம் நம்மிடம் தோன்றும் அளவுக்கு படத்தின் கதைகளத்தை சிறப்பாக செய்திருந்தாலும்

அவர் அனுபவமின்மை படம் பார்க்கும் நாம் அனைவருக்கும் தெரியவரும்

முதல் படம் என்றாலும் விஷயம் தெரிந்த சிலரை வைத்து பாடத்தை இயக்கியிருந்தால் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கும் ஆனால் இவரின் அனுபவமின்மை காரணத்தால் படத்தில் திரைக்கதை ஓட்டம் காட்சி அமைப்பு வசன உச்சரிப்பு சண்டை காட்சிகள் என அனைத்திலும் ஒரு அமேச்சூர் தனம் தெரிகிறது

எடுத்துக்கொண்ட  கதைக்களம் புதிதாக இருந்தாலும் அதை சொல்லும் விதம் மிகவும் நாடகத் தனத்தை விட மிக மோசமாக இருக்கிறது
அவரின் நடிப்பு அதிலும் அவர் வெற்றி வாய்ப்பு இழந்து உள்ளார்

உதட்ட அசைவிற்கும் வசன வெளிப்பாட்டிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது
சினிமா பாஷையில் இதை நான் சிங் என்பார்கள்

அதேபோல தான் சினிமா வீரபாகுக்கு நான் சிங்காக இருக்கிறது

Must Read

spot_img