spot_img
HomeNews"விஸ்வம்பராபடம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!

“விஸ்வம்பராபடம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் “விஸ்வம்பரா” படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார், இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பான “விஸ்வம்பரா” படத்தின் டைட்டில் டீஸர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்தார், மிகச்சிறப்பான தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியிருந்த இந்த டீசர், நாடு முழுவதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலக சினிமாவுக்கு இணையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் உலகை உருவாக்க, படக்குழு 13 பெரிய செட்களை அமைத்தது, படத்தின் காட்சிகளை படமாக்கி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கினாலும், சிரஞ்சீவி நேற்று விஸ்வம்பராவின் மாயாஜால உலகத்தில் கால் பதித்துள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ஹைதராபாத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவான ஒரு பெரிய செட்டில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர், சிரஞ்சீவி விஸ்வம்பரா உலகில் காலடி எடுத்து வைப்பதை காட்டுகிறது. ரசிகர்களை மயக்கும் வகையில் அட்டகாசமாக அமைந்திருக்கிறது இந்த போஸ்டர்.

UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Must Read

spot_img