spot_img
HomeNewsஎன்னது.. திரிஷா மனது வைத்தால் தான் அஜித் படத்திற்கு விமோசனம் கிடைக்குமா ?

என்னது.. திரிஷா மனது வைத்தால் தான் அஜித் படத்திற்கு விமோசனம் கிடைக்குமா ?

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கால் பதித்து இப்போதும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. அதிலும் கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ந்து வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தன்னுடைய இடத்தை படு ஸ்ட்ராங்காக மாற்றிக் கொண்டார் திரிஷா.

இவருக்கு போட்டியாக இருக்கும் நயன்தாரா திருமணம் செய்து கொண்ட பின்பு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறார். அவரது செல்வாக்கும் கூட அதேபோல குறைந்து கொண்டுதான் வருகிறது. அதே சமயம் திரிஷாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு 9 வருடம் கழித்து மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. அவரைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு கால் சீட்டு கொடுத்துவிட்டால் அதில் குழப்படி செய்யாமல் சரியாக நடந்து கொள்வார்.

ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலை இயக்குனர் பிரியன் இறந்து போனது காரணமாக சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சமீப காலமாக இவர்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் அதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் செட் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆனால் ஏற்கனவே இந்த படத்திற்காக திரிஷா கொடுத்த கால்சீட் அவ்வப்போது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் வீணாகிவிட்டது. இப்போது அவர் மலையாளத்தில் மோகன்லால் படம் ஹிந்தியில் சல்மான் கான் படம் என மிகப் பெரிய படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வருவதால் விடாமுயற்சி படத்திற்கு அவரால் தற்போது தேதிகள் ஒதுக்க முடியாத சூழல் இருக்கிறது.

இதனால் திரிஷா இல்லாத காட்சிகளை மட்டுமே இப்போது படமாக்கி வருகிறாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. இதனால் இன்னும் பல படப்பிடிப்பு தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. இனி மீண்டும் திரிஷா கால்சீட் கொடுத்தால் தான் படப்பிடிப்பு அடுத்த கட்டத்திற்கு நகரும் என்பதால் திரிஷாவின் வரவிற்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

Must Read

spot_img