spot_img
HomeNewsஅவரை ஒரு தடவையாவது வந்து பாத்திருக்கணும் ; கேப்டனை நினைத்து கண்கலங்கிய நடிகை

அவரை ஒரு தடவையாவது வந்து பாத்திருக்கணும் ; கேப்டனை நினைத்து கண்கலங்கிய நடிகை

தமிழ் சினிமாவிலும் சரி தமிழக அரசியலில் சரி வெற்றிகரமாக பயணித்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாத இறுதியில் உடல்நலக் குறைவால் காலமானார், அவர் நடிகராக மட்டுமல்ல நடிகர் சங்க தலைவராகவும் மிகச் சிறப்பாக பொறுப்பு வகித்தவர். பல நடிகர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர்.

ஆனாலும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. இன்னும் சிலர் இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை. அதே சமயம் அவருடன் எண்பது 90களில் இணைந்து நடித்த ராதா, ரேகா போன்ற பல நடிகைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதையும் பார்க்க முடிந்தது.

தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நடிகை ரம்பா தமிழகத்துக்கு வந்துள்ள நிலையில் கேப்டனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு அப்படியே அவரது வீட்டுக்கு சென்று அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்தை பார்க்க வர முடியவில்லை என்றும் அவர் இறப்பதற்கு முன் ஒரு முறையாவது வந்து பார்த்திருக்க வேண்டும்.. மிஸ் பண்ணிவிட்டேன் என்று கூறி கண்கலங்கி உள்ளார்.

இத்தனைக்கும் அவர் விஜயகாந்த்துடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய தர்மசக்கரம் என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

spot_img