கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருந்தார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற, நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு புகழ் தேடிக்கொடுத்த அர்ஜுன் ரெட்டி பட இயக்குனரான சந்தீப் வங்கா ரெட்டி தான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் பெண்களை தவறாக சித்தரிக்கிறது என்று படம் வெளியான போதே எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இருந்தாலும் படம் ஆயிரம் கோடி வசூலித்தது. இப்போதும் கூட இந்த படம் குறித்து யாரோ ஒருவர் விமர்சித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கானின் இரண்டாவது முன்னாள் மனைவி கிரண் ராவ் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது பெண்களை மட்டும் தட்டி இப்போது அதிக படங்கள் வருகின்றன என கூறினார்.
உடனே தன்னைத்தான் அவர் சொல்கிறார் என நினைத்துக் கொண்ட அனிமல் பட இயக்குனர் உங்கள் கணவர் அமீர்கான் நடித்த படங்களை முதலில் பாருங்கள். தில் என்கிற படத்தில் அவர் ஒரு பெண்ணை ரேப் செய்து விடுவதாக கூறி மிரட்டுவார். அதையெல்லாம் விட்டுவிட்டு என் படத்தை குறை சொல்ல வந்து விட்டீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.