நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி உள்ளார். இதற்கு சினிமா உலகில் இருந்து பலரும் வரவேற்பு தெரிவித்து இருந்தாலும் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் அவருக்கு உடனடியாக வாழ்த்துக்கள் தெரிவித்ததாக தெரியவில்லை. அதேசமயம் அவர் கட்சியை அறிவித்த நான்கு நாட்கள் கழித்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய்யின் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜய்க்கும் ரஜினிக்கும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான மோதல் இருப்பதாக சொல்லப்படுவதால் தான் (இப்போது மோதல் இல்லை) அவர் இவ்வளவு தாமதமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது விஜய்க்கும் தனக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் அந்த காக்கா கழுகு கதை கூட விஜய்யை நினைத்து சொல்லவில்லை என்றும் கூறியதுடன் விரைவில் அவர் அரசியல் கட்சி வேறு துவங்க இருக்கிறார் வாழ்த்துக்கள் என்று அப்போதே கூறியிருந்தார்.
அது மட்டும் அல்ல இவர்களுக்கு இடையே பிரச்சனை இல்லை என ரஜினிகாந்த் வெளியே தெளிவாக சொன்ன பிறகு அடுத்த சில நாட்களிலேயே தான் விஜய்யும் கட்சியை அறிவித்திருக்கிறார். கட்சியை அறிவிக்கும் சமயத்தில்போது ரஜினி ரசிகர்களின் வெறுப்பு தன்மீது வந்துவிடக் கூடாது என்பதற்காக ரஜினியின் இவ்வாறு பேசுமாறு அவர் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதனால் தான் கட்சி தொடங்கியதும் உடனே விஜய்க்கு வாழ்த்து சொன்னால் இதன் பின்னணியில் ரஜினி இருக்கிறார் என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அதை தவிர்ப்பதற்காக தான் தற்போது தாமதமாக ரஜினி வாழ்த்து சொல்லி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.