spot_img
HomeNewsஈகோவால் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் விஜய் ; கருத்து கூறிய நடிகருக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

ஈகோவால் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் விஜய் ; கருத்து கூறிய நடிகருக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

புலி வருது புலி வருது என்கிற கதையாக தான் நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைய போகிறார் தனி கட்சி தொடங்கப் போகிறார் என பலரும் சொல்லிக்கொண்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சி பெயரை அறிவித்தார் விஜய்.

அது மட்டுமல்ல தற்போது வெங்கட் பிரபு டைரக்ஷனில் தான் நடித்து வரும் கோட் படம் மற்றும் இதைத் தொடர்ந்து அடுத்ததாக நடிக்க ஒத்துக்கொண்டுள்ள படம் ஆகியவற்றை முடித்துவிட்டு சினிமாவை விட்டு ஒதுங்குவதாகவும் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார் விஜய்.

அவர் கட்சி துவங்கியதற்கு பல அரசியல் கட்சிகளும் திரை உலகில் இருந்து பலரும் தங்களது வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கன்னட நடிகரான சேத்தன் குமார் என்பவர் விஜய்யின் அரசியல் கட்சி துவக்கம் பற்றி விமர்சித்து கருத்து கூறியுள்ளார்.

இது பற்றிய அவர் கூறும்போது சிந்திக்கப்பட்ட தொலைநோக்கு பார்வையாக இல்லாமல் ஒரு ஈகோ பயணமாகவே நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதாக தெரிகிறது என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரது கருத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Must Read

spot_img