spot_img
HomeNewsமெட்ராஸ் டெக் நிறுவனம் தனது முதல் படைப்பாக, புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது.

மெட்ராஸ் டெக் நிறுவனம் தனது முதல் படைப்பாக, புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது.

மெட்ராஸ் டெக் நிறுவனம் தனது முதல் படைப்பாக, புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது.

உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மிகமிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஆரி கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘மைம்’கோபி, வையாபுரி, ‘ப்ளாக்’பாண்டி, ‘ஜெயிலர்’ தன்ராஜ், ஷெர்லி பபித்ரா, கனிமொழி போன்றோருடன் தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர் ஒருவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

புதிய இசையமைப்பாளரின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். செம்பூர் கே.ஜெயராஜ், ராஜசேகர பாண்டியன் வசனம் எழுதியுள்ளனர்.

படத்தொகுப்பு கெவின் ரிச்சர்ட், கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி, ஆடை வடிவமைப்பாளராக சுபிகா, ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இயக்குநர் ராஜசேகர பாண்டியன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் சார்பாக அருணாச்சலம் அனந்தராமன் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு,மதுரையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

நடிகர்கள்:

ஆரி
லட்சுமிமேனன்
‘மைம்’கோபி
வையாபுரி
‘ப்ளாக்’பாண்டி
‘ஜெயிலர்’தன்ராஜ்
ஷெர்லி பபித்ரா
கனிமொழி

படக்குழு:

தயாரிப்பு : மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர் : அருணாச்சலம் அனந்தராமன்

கதை, திரைக்கதை, இயக்கம் : ராஜசேகர பாண்டியன்

பாடல்கள் : ‘கவிப்பேரரசு’ வைரமுத்து

ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து

வசனம் : செம்பூர் கே.ஜெயராஜ், ராஜசேகர பாண்டியன்

இசை : அறிமுக இசையமைப்பாளர்

படத்தொகுப்பு : கெவின் ரிச்சர்ட்

கலை இயக்குநர் : சுரேஷ் கல்லேரி

ஆடை வடிவமைப்பாளர் : சுபிகா

மக்கள் தொடர்பு : ரியாஸ்.K.அஹ்மத்

Must Read

spot_img