சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இளம் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க மிக முக்கியமான மொய்தீன் பாய் என்கிற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படம் என்றாலும் அதன் பின்னணியில் உள்ள மத அரசியல் பற்றி தான் இந்த படம் பேசுகிறது. வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இந்த படத்தில் இரண்டு நிமிடம் ஆறு வினாடி நீளம் கொண்ட காட்சிகளை நீக்கி உள்ளது தணிக்கை குழு. குறிப்பாக அந்த காட்சியில் மதம் சம்பந்தமான வசனங்கள், வேறு சில கெட்ட வார்த்தைகள் இருந்ததாகவும் அவற்றை நீக்கியே ஆக வேண்டும் என்று சென்சார் அதிகாரிகள் கதாராக கூறி விட்டார்களாம்.
தான் எடுப்பது மதம் சம்பந்தமான படம் என்றும் அதில் தனது தந்தை ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று தெரிந்தும் இது போன்ற விஷயங்களை கொஞ்சம் கவனத்தில் கொள்ளாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்படி சென்சாருக்கு படத்தை அனுப்பினார் ? இதனால் ஏற்பட்ட சங்கடத்தை அவர் தவிர்த்து இருக்கலாமே என்று ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.