spot_img
HomeNewsநான் பாஜக தான்.. ஆனால் எப்போதும் விஜய்யின் விசுவாசி ; இயக்குநரின் தில் பேச்சு

நான் பாஜக தான்.. ஆனால் எப்போதும் விஜய்யின் விசுவாசி ; இயக்குநரின் தில் பேச்சு

நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை அறிவித்து அதை உறுதி செய்தார். வரும் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார். அவரது அரசியல் வருகைக்கு அவரை சார்ந்தவர்கள் மட்டுமே வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். அதே சமயம் அவருக்கு வாழ்த்து கூறினால் நமக்கு எதுக்கு வம்பு என பல பேர் மௌனம் காத்து வருகின்றனர்.

ஆனால் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து மீண்டும் சிவகாசி என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் கொடுக்கும் அளவிற்கு விஜய்யிடம் நம்பிக்கையை பெற்றவர் இயக்குனர் பேரரசு. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தனக்கு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் மத்திய அரசு பற்றி நல்ல விஷயங்களை கூறி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நினைவெல்லாம் நீயடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் விஜய்யை விமர்சித்து பேசினார். குறிப்பாக எம்ஜிஆர் போல வர வேண்டும் என்றால் அவரை போல கைக்காசை செலவழித்து மக்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும். புஸ்ஷி ஆனந்தை விட்டு அறிக்கை விடுவதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று கூறினார்.

அடுத்து பேசிய பேரரசு அவருக்கு பதிலடி கொடுப்பது போல, “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும்” என்று கூறினார்.

பாஜகவில் அண்ணாமலை இளம் தலைவராக வளர்ந்து வரும் நிலையில் இவர் இப்படி விஜய்க்கு விசுவாசி எனக் கூறியது பாஜக வட்டாரத்திலேயே அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

Must Read

spot_img