spot_img
HomeNewsஐஸ்வர்யாவின் புத்திசாலித்தனத்தால் குசேலனாக மாறாமல் தப்பித்த லால் சலாம்

ஐஸ்வர்யாவின் புத்திசாலித்தனத்தால் குசேலனாக மாறாமல் தப்பித்த லால் சலாம்

ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்காமல் கொஞ்ச நேரமே வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார். அதே சமயம் அவர் வரும் காட்சிகள் எல்லாம் பவர்புல்லாக இருப்பதால் படமும் வெற்றிக் கோட்டை தொட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதேபோன்று சிறப்பு தோற்றங்களில் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி, பெத்தராய்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதே சமயம் இதே போன்ற ஒரு கதை அம்சத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படம் தோல்வியை தழுவியது.

காரணம் அந்த படம் மலையாளத்தில் மம்முட்டி நடித்த ஒரு படத்தின் ரீமேக். அந்த படத்தில் மம்முட்டி கிளைமாக்ஸில் பத்து நிமிடம் மட்டுமே வந்து போவார். அதில் அவரது நடிப்பும் பேசப்பட்டது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே படத்தை இங்கே ரீமேக் செய்த பி வாசு தமிழில் ரஜினி நடிக்கும் காட்சிகள் அதிகம் வர வேண்டும் என்பதற்காக பல காட்சிகளை தேவையில்லாமல் திணித்து ரசிகர்களுக்கு போரடிக்க வைத்து படத்தை தோல்வியை தழுவ வைத்து விட்டார்.

இந்த நிலையில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை ரஜினியை லால் சலாம் படத்தின் நடிக்க வைத்தாலும் எந்த காட்சிகளில் எவ்வளவு நேரம் அவர் வர வேண்டுமோ அதை மட்டுமே பயன்படுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரையும் புரமோசனில் முன்னிலைப்படுத்தினார்.

மேலும் படத்தின் வியாபாரத்தையும் ஒரு ரஜினிகாந்த் பட வியாபாரமாக இல்லாமல் சாதாரண ஒரு படத்தின் வியாபாரமாகவே பண்ணும்படி தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடமும் கேட்டுக் கொண்டார். அவரது இந்த புத்திசாலித்தனத்தால் படமும் எதிர்பார்த்தபடி வெற்றியை பெற்றுள்ளது.

Must Read

spot_img