spot_img
HomeNewsவிஷாலின் அரசியல் ஆசைக்கு தந்தை வைத்த செக் ; இதெல்லாம் நடக்கிற காரியமா ?

விஷாலின் அரசியல் ஆசைக்கு தந்தை வைத்த செக் ; இதெல்லாம் நடக்கிற காரியமா ?

தமிழக அரசியலில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒரு நடிகராக இருந்து அரசியலில் நுழைந்து தனி கட்சி துவங்கி முதல் தேர்தலிலேயே வென்று, சாகும் வரை முதல்வராகவே இருந்து தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அதன் பிறகு பல நடிகர்கள் எம்ஜிஆரை போல தனியாக அரசியல் கட்சி துவங்கி ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்து தோல்வியை தழுவினார்கள்.

ஆனால் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு மிகப்பெரிய சக்தியாக வருவார் என நினைக்கப்பட்ட விஜயகாந்த் அதேபோல கட்சியை துவங்கி ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் உடல் நல குறைவு அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ரஜினியும் இதே போல கட்சி ஆரம்பிக்கிறேன் என கூறி உடல் நலக்குறைவு காரணமாக ஒதுங்கிக் கொண்டார்.

இந்த நிலையில் தான் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் இதே கனவில் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இன்னும் 2 படங்களில் நடித்துவிட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். விஜய்யே ஏன் அரசியலுக்கு வருகிறார் என பலரும் கேள்வி எழுப்பி கொண்டிருக்க சைடு கேப்பில் எப்போதும் காமெடி பண்ணிக் கொண்டிருக்கும் நடிகர் விஷால் நானும் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் வந்தால் வருவேன் மக்களுக்கு நல்லது செய்ய கடமைப்பட்டுள்ளேன் என்று பேசத் துவங்கி விட்டார்.

அதேசமயம் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி இவர் அரசியலுக்கு வருவது குறித்து கூறும்போது, “சின்ன வயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விஷால் நினைப்பார். கடன் வாங்கியாவது உதவுவார். அரசியலுக்கு அவர் வரட்டும்.. வருவார்.. ஆனால் அஜித் விஜய் போல நாலு காசு சம்பாதித்து விட்டு பின்னர் அரசியலுக்கு வந்து அந்த காசை மக்களுக்கு செலவு பண்ணட்டும். அதுவரை ஒழுங்காக நடிக்கட்டும்” என்று கூறி விஷாலின் அரசியல் பேச்சுக்கு தற்காலிக தடை போட்டுள்ளார்.

Must Read

spot_img