அசோக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்திருக்கும் படம் இ மெயில்.
கதைக்களம்
நான்கு தோழிகளுடன் தங்கி இருக்கும் நாயகிக்கு சரியான வேலை அமையாததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது அவரது செல்போனுக்கு ஒரு விளையாட்டு அழைப்பு வருகிறது. அதை விளையாட அவளுக்கு ஏகப்பட்ட பணம் வருகிறது. அதே சமயம் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் நாயகன் அசோக்கை நாயகி காதலிக்க இருவருக்கும் திருமணம் ஆகிறது.
இந்நிலையில் விளையாட்டு விபரீதம் ஆகிறது அந்த விளையாட்டின் மூலம் நாயகியை பிளாக்மெயில் செய்து பல விஷயங்களை சாதிக்க ஒரு நபர் துடிக்க அது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகி இறங்கும் போது எதிர்பாராத அதிர்ச்சி நமக்கு காத்திருக்கிறது. அதுதான் இமெயில்.
நாயகன் அசோக் பிடிச்சிருக்கு, முருகா என பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு சரியான ஒரு படம் அமையவில்லை என்பதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ஆனால் ஒரிஜினல் கதாநாயகன் யார் என்றால் அது கதாநாயகி தான். அவருக்கு தான் டான்ஸ், சண்டை காட்சிகள், காமெடி காட்சிகள் என பலவித பரிமாணங்களை இயக்குனர் வழங்கி அவரும் இது சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
மினிஸ்டர் தாதா என பல கதாபாத்திரங்கள். மினிஸ்டர் உட்பட பல பெரிய மனிதர்களின் சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் ஹார்ட் டிஸ்க் தாதா வசம் பத்திரமாக இருக்க அதை பறிக்க போடும் பிளான்களின் கூட்டு முயற்சியை திரைக்கதையாக வடிவமைத்து அதை நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் ஆர் ராஜன். இவரை நாம் பாராட்டியாக வேண்டும்
இவர் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சினிமா பற்றி தெரியாமல் தனக்கு தெரிந்த கதையை திரைக்கதையாக்கி இயக்கி தயாரித்திருக்கிறார். முன் அனுபவம் இல்லாதது படத்தை பார்த்தால் தெரியவில்லை. அந்த அளவுக்கு திரைக்கதையும் இயக்கத்தையும் சிறப்பாக செய்து இருக்கிறார். சில சில குறைகள் இருந்தாலும் அடுத்த படத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்து வெற்றி இயக்குனர் வரிசையில் வருவார் என்பது நமது நம்பிக்கை.. வாழ்த்துக்கள் !!