spot_img
HomeNewsலால் சலாம் ; விமர்சனம்

லால் சலாம் ; விமர்சனம்

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றி விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பலர் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் லால் சலாம்.

கதைக்களம்

இந்து முஸ்லிம் இருவரும் அண்ணன் தம்பி போல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஊரில் தன் அரசியல் லாபத்திற்காக பிரிவினை ஏற்படுத்தி அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை குலைத்து தன் ஓட்டு வங்கியை நிரப்ப முடர்சிக்கும் ஒரு அரசியல்வாதியின் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொண்டார்களா என்பதே லால் சலாம் படத்தின் கதை.

தன் மகளின் படம் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ஈர்ப்பு நமக்கு ஏற்படவில்லை. அவருக்கான காட்சி அமைப்பும் ரஜினி ரசிகனை திருப்திப்படுத்தவும் இல்லை. ஒரு மூன்றாம் இடத்தில் உள்ள நடிகர்கள் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ரஜினிகாந்த் நடித்ததற்கு காரணம் அவர் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் என்ற ஒரு காரணம் மட்டுமே.

கதைக்களம் 93 நடக்கிறது ஆனால் நமக்கு 93க்குள் செல்ல முடியவில்லை. அதற்கான காட்சியமைப்பை இயக்குனர் தெளிவாக நமக்கு வழங்கவில்லை. நாயகன் விஷ்ணு விஷால் இணை நாயகன் விக்ராந்த் இவர்கள் நாயகர்கள் என்றாலும் நமக்கு ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் முன் இவர்களின் கதாபாத்திரம் பெரிதாக எடுபடவில்லை.

இயக்குனர் எதை கூற வருகிறார் என்பதை தெளிவாகவும் கூறவில்லை. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்துகிறாரா அல்லது ஊர் தேர் திருவிழாவை மையப்படுத்துகிறாரா அல்லது இந்து முஸ்லீம் கலவரத்தை மையப்படுத்துகிறாரா, அரசியலை அலசுகிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

கிராமத்தில் இருக்கும் ரஜினி மும்பை சென்று பெரிய பிசினஸ்மேன் ஆக இருக்கிறார். ஆனால் இவரின் ஓபனிங் காட்சி மிகப்பெரிய தாதாவை காட்டுவது போல் இருக்கிறது. ரஜினி தாதாவா ? பிஸ்னஸ் நடத்தும் பெரிய மனிதனா ? இதுவும் குழப்பத்தில்.. லைக்கா தயாரிப்பு என்பதால் பணம் படம் முழுவதும் விளையாடி இருக்கிறது..

லால் சலாம் ; ஐஸ்வர்யா தலையில் தொப்பி

Must Read

spot_img