புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சினிமாவில் நடித்து வந்த சமயத்தில் தான் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் தனியாக அதிமுகவை தொடங்கிய பின்னும் கூட சினிமாவில் நடித்து வந்தார். அதேசமயம் அவர் முதலமைச்சராக மாறிய பிறகு சினிமாவில் நடிக்கலாம் என நினைத்தபோது அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டார்.
அதேபோல நடிகர் விஜயகாந்த் தான் அரசியல் கட்சி அறிவித்ததை தொடர்ந்து சில வருடங்கள் வரை படங்களில் நடித்தார். பின்னர் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை நடிகர் விஜயும் துவக்கி உள்ளார். அது மட்டுமல்ல இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க போவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்துக்கு அடுத்ததாக சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் இப்படி ஒரு முடிவு எடுத்தது திரையுலகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி தான். இந்த சமயத்தில் நடிகர் சீமான், விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்தும் படங்களில் அவர் நடிக்க போவதில்லை என்கிற கருத்து குறித்தும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
விஜயுடன் அவ்வப்போது பேசி வருவதாகவும் விஜய் தன்னிடம் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அதோடு நிறுத்திக் கொள்ளப் போவதாக கூறியதாகவும், அதற்கு, “வேண்டாம் வேண்டாம்,, இரண்டு படங்களின் நடித்துவிட்டு அதன் பிறகு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து களத்தில் இறங்கி தம்பி” என்று கூறியதாகவும் கூறியுள்ளார் சீமான்.