spot_img
HomeNewsநீ ஸ்ரீதேவி மகள் தான்.. ஆனா ஸ்ரீதேவி இல்ல ; கொட்டு வைத்த தெலுங்கு திரையுலகம்

நீ ஸ்ரீதேவி மகள் தான்.. ஆனா ஸ்ரீதேவி இல்ல ; கொட்டு வைத்த தெலுங்கு திரையுலகம்

வாரிசு நடிகர்கள் தொடர்ச்சியாக தங்களது பெற்றோர்களை பின்பற்றி நடிப்பிலோ அல்லது டைரக்சன் உள்ளிட்ட வேறு துறைகளிலோ இறங்குவது வழக்கமான ஒன்றுதான். அதில் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது நடிப்புத் துறையை தான்.

அதேசமயம் நடிப்பில் பெரிய அளவில் திறமை இல்லை என்றாலும் தங்களது பெற்றோர் போல வசீகரிக்கும் அழகு இல்லை என்றாலும் இந்த வாரிசு நட்சத்திரங்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே.. அடாடா.. தாங்க முடியவில்லை.. எல்லோரும் அப்படி இல்லை என்றாலும் ஒரு சிலர் தங்களது உண்மையான வேல்யூ தெரியாமல் தங்களது பெற்றோரின் புகழை வைத்து அவர்களைப் போன்றே தங்களையும் நினைத்து கொள்கின்றனர்.

தமிழில் அறிமுகமாகி கமல் ரஜினி உள்ளத்த சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து பாலிவுட்டுக்குச் சென்று வட இந்திய நடிகைகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டின் கனவுக்கன்னி என்று சொல்லப்பட்டவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.

அவருக்கு இரண்டுமே பெண் குழந்தைகள் தான்.. அந்த வகையில் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மாவை போல திரையுலகில் நடிப்பை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நுழைந்து நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

இவருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜுக்கும் உருவ சாயலில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிக்க ஐந்து கோடி சம்பளம் கேட்டு வாங்கி இருக்கிறார். அடுத்ததாக இவரை ராம்சரண் படத்தில் கதாநாயகியாக நடிக்க கேட்டு உள்ளார்கள். அதில் நடிப்பதற்காக 10 கோடி சம்பளமாக கேட்டுள்ளாளாராம்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன தயாரிப்பாளர், அம்மா நீ ஸ்ரீதேவியின் மகள் தான்.. அதில் சந்தேகமே இல்லை.. ஆனால் நீ ஸ்ரீதேவி இல்லை.. அதை முதலில் புரிந்து கொள்.. அதற்கு ஏற்றவாறு சம்பளம் கேள். என்று அந்த பெண்ணின் கர்வத்துக்கு கொட்டு வைத்துள்ளாராம்.

Must Read

spot_img