spot_img
HomeNewsஇதை மட்டும் விஜய் செய்திருந்தால் அவர் கட்சியிலேயே உறுப்பினராக இணைந்திருப்பேன் ; இயக்குனர் அமீர் அதிரடி

இதை மட்டும் விஜய் செய்திருந்தால் அவர் கட்சியிலேயே உறுப்பினராக இணைந்திருப்பேன் ; இயக்குனர் அமீர் அதிரடி

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்ததாக நடிகர் விஜய் தற்போது மிகப் பெரிய அளவில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இதற்கு முன்பு விஜயகாந்த், அதற்கு அடுத்து ரஜினிகாந்த், கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எழுந்த அரசியல் ஆசை போல விஜய்க்கும் கடந்த பல வருடங்களாகவே அரசியலில் நுழையும் ஆசை இருந்து வந்தது.

அதற்கான நேரம் பார்த்து வந்த விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சியை அறிவித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்கு திரையுலகில் இருந்து பலர் ஆதரவும் ஒரு சிலர் மறைமுக எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் பற்றி பேசினாலே பரபரப்பை ஏற்படுத்தி வரும் இயக்குனரும் நடிகருமான அமீரிடம் விஜய்யின் இந்த அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, “விஜய் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை. பல கோடிகள் சம்பளமாக வாங்கி வரும் நிலையில் அதையெல்லாம் விட்டுவிட்டு தான் அரசியலுக்கு வருகிறார். அதேசமயம் தமிழக வெற்றி கழகம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு வெற்றி கழகம் என்று அவர் பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

மேலும் அவர் தன்னுடைய லெட்டர் பேடில் விஜய் என்று இல்லாமல் தன்னுடைய உண்மையான பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரைத்தான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஒரு மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவன் தமிழகத்திற்கு முதல்வர் ஆகக்கூடாதா ? அந்த வகையில் அப்படி தனது பெயரை முழுமையாக குறிப்பிட்டு இருந்தால் நானே அவரது கட்சியை தேடிச்சென்று உறுப்பினராக மாறி இருப்பேன்.. அதை விஜய் செய்ய தவறிவிட்டார்” என்று கூறியுள்ளார்.

Must Read

spot_img