spot_img
HomeNewsசிவகார்த்திகேயன் கிட்ட போகாதீங்க.. என்கிட்ட வாங்க.. ; இயக்குநருக்கு வலை வீசிய தனுஷ்

சிவகார்த்திகேயன் கிட்ட போகாதீங்க.. என்கிட்ட வாங்க.. ; இயக்குநருக்கு வலை வீசிய தனுஷ்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்தபடியான இடத்தில் வைத்து பேசப்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு முன்னதாக அறிமுகமான சூர்யா, கார்த்தி, விக்ரம், சிம்பு, தனுஷ் இவர்களை எல்லாம் தாண்டி வியாபார ரீதியாக சிவகார்த்திகேயன் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

தன்னை அறிமுகப்படுத்திய தனுஷை விட அதிக அளவில் சம்பளம் வாங்குவதாகவும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் குட் நைட் என்கிற படம் வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் குட்நைட் படத்தை பார்த்த நடிகர் தனுஷ் அந்த படத்தின் இயக்குனருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். அப்போது உங்களிடம் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள், நாம் இருவரும் இணைந்து பணியாற்றலாம் என்று ஒரு தூண்டிலையும் போட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த இயக்குனர் தான் இப்போது தான் ஒரு கதையை எழுத துவங்கியுள்ளதாகவும் எழுதி முடித்த பிறகு தான் அது யாருக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்பதை அறிந்தே, தனுஷ் அதை தடுக்கும் விதமாக அவரை தன் பக்கம் திருப்பும் விதமாக இப்படி ஒரு வலையை வீசி உள்ளார் என்று திரையுலகில் பேசிக் கொள்ளப்படுகிறது.

Must Read

spot_img