spot_img
HomeNewsமாறுவேடத்தில் சென்று விஜய் கட்சி பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிரபல ஹீரோ

மாறுவேடத்தில் சென்று விஜய் கட்சி பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிரபல ஹீரோ

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிவிட்டார். ஆனால் இப்போது எல்லாம் அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை. இன்னும் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் ஆவது படங்களில் நடித்துவிட்டு பின்னர் தான் அரசியலுக்கு வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது இந்த அறிவிப்பு பல அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக அடுத்து பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் விஜய் அதில் போட்டியிடவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் யாருக்காக இந்த தேர்தலில் பணியாற்றுவார்கள் என்பது குறித்தும் மக்கள் அவரது அரசியல் வருகை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் பல கட்சிகள் தற்போது மறைமுகமாக சர்வே நடத்தி வருகின்றனவாம்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் தான் கட்சி துவங்கியது குறித்தும் அரசியலுக்கு வருவது குறித்தும் 2026 தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என நேரிலேயே தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளாராம் நடிகர் விஜய்.

இதைத்தொடர்ந்து தற்போது பாண்டிச்சேரியில் கோட் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் படப்பிடிப்பு முடிந்த பின்பு அல்லது ஓய்வு இருக்கும் நேரங்களில் மாறுவேடம் அணிந்து பல தெருக்களுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேச்சுக் கொடுப்பது போல தனது அரசியல் வருகை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்கிற கருத்தை நேரிலேயே கேட்டு அறிந்து உள்ளாராம்.

இதுவரை எந்த ஒரு நடிகரும் அரசியல்வாதியும் செய்யாத விஷயம் இது. இதன் மூலம் மக்கள் சொல்லும் குறை நிறைகளை அலசி அரசியலில் வெற்றி பெறுவதற்கு சில நல்ல முடிவுகளை விஜயால் எடுக்க முடியும் என்பது உறுதியாக சொல்லலாம்.

Must Read

spot_img