ஒரு காலகட்டத்தில் அனைவரும் வியந்து பார்க்கும் விதமாக முன்னணி நட்சத்திரங்களை இயக்கி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணியில் இயக்குனர் வரிசையில் இருந்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஆனால் கடந்த சில வருடங்களாக குறிப்பாக மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர், விஜய் நடித்த சர்க்கார், ரஜினிகாந்த் நடித்த தர்பார் என அவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் அடுத்து அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னணி நடிகர்கள் பலரும் தயக்கம் காட்டினார்கள்.
விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த முருகதாஸுக்கு விஜய்யே அடுத்த படம் கொடுக்க தயங்கினார். இந்த நிலையில் தான் ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அதேசமயம் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார். இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை.
இந்த படத்திற்காக அவர் உடல் எடையை கூட்டி கட்டு மஸ்தான் உடலுடன் நடித்து வருகிறார். அதேசமயம் ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் கொஞ்சம் எடை குறைத்து ஸ்லிம் ஆன உடலுடன் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டி இருக்கிறது.
இந்த இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க வேண்டி இருப்பதால் உடற்பயிற்சி செய்து உடல் எடையை கூட்டி குறைத்து நடிக்க வேண்டிய ஒரு புதிய சிக்கல் சிவகார்த்திகேயனுக்கு உருவாகி இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் அழகாக சமாளிப்பார் என எதிர்பார்க்கலாம்.