spot_img
HomeNewsகார்த்திக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு இப்படி ஒரு நிலை வர வேண்டுமா ? அட கொடுமையே..!

கார்த்திக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு இப்படி ஒரு நிலை வர வேண்டுமா ? அட கொடுமையே..!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள், குறிப்பாக ஹீரோக்கள் பல வருடங்கள் தங்களை ஹீரோக்களாகவே நிலைநிறுத்திக் கொண்டு விடுகின்றனர். ஆனால் கதாநாயகிகள் அப்படி அல்ல.. ஒரு கட்டத்தில் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களுக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது ரிட்டயர் ஆன கதாநாயகிகளுக்கு என்று மட்டும் எண்ண வேண்டாம்.

தற்போது பீக்கில் நடித்து வரும் சில கதாநாயகிகள் கூட அதிக சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரகுல் பிரீத் சிங். சமீபத்தில் வெளியான அயலான் படத்தில் கூட சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் தற்போது பாலிவுட்டில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் ராமாயண் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா ? ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் தான். இப்படி அழகான நடிகைக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் அமைய வேண்டுமா என ரசிகர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே படத்தில் சீதாவாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

spot_img