spot_img
HomeNewsநீர்நிலை சாவுகள் குறித்து பாக்கியராஜ் பேசியதால் புது வடிவில் கிளம்பிய பிரச்சனை

நீர்நிலை சாவுகள் குறித்து பாக்கியராஜ் பேசியதால் புது வடிவில் கிளம்பிய பிரச்சனை

இயக்குனர் பாக்கியராஜ் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். அதன் மூலமாக அவபோது சில சமூக விழிப்புணர்வு செய்திகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பவானி அருகே உள்ள ஒரு கோவில் அருகில் உள்ள ஆற்றில் அவ்வப்போது பலர் குளிக்க சென்ற சமயத்தில் ஆற்றில் உள்ள பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்களது மரணம் இயற்கையானது அல்ல என்றும் அங்குள்ள சிலர் பணத்திற்காக இப்படி ஆற்றில் குளிக்கும் சிலரை தண்ணீருக்குள் இழுத்து அங்குள்ள பாறை இருக்குகளின் சிக்கவைத்து கொலை செய்கின்றனர் என்றும் பின்னர் அவர்களை தேடுவது போல நடித்து இறந்து போன குடும்பத்தாரிடம் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கின்றனர் என்றும் நான் கேள்விப்பட்டதுண்டு என்கிற ஒரு தகவலை தற்போது கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த செய்தி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே வாட்ஸ் அப்பில் வலம் வந்த செய்தி தான்.. இப்போது ஏனோ தெரியவில்லை பாக்கியராஜ் இதை கூறியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி அப்படி எதுவும் எங்கள் பகுதியில் இது போன்ற கொலை நடந்ததாக வழக்கு பதிவாகவில்லை. பாக்கியராஜ் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அது மட்டுமல்ல அந்த பகுதியைச் சேர்ந்த மஸ்தான் என்பவர் பாக்யராஜ் மீது இப்படி பேசியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க என்றோ நடந்த ஒரு சம்பவத்தை இப்படி பாக்கியராஜ் போன்ற பிரபலங்கள் பேசியதால் அது தமிழக அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதே சமயம் இதுபோன்று தங்களது உறவுகளை இந்த ஆற்றில் பறிகொடுத்த குடும்பத்தினரும் இப்படித்தான் நடந்திருக்குமோ என்று மீண்டும் தாங்க முடியாத துயரத்திற்கு ஆளாகி இருப்பார்கள். இன்னொரு பக்கம் இது போன்ற மரணங்களில் தேடுதலில் இறங்கி சம்பந்தப்பட்ட சடலங்களை மீட்டு வந்த நபர்கள் மீது தான் தற்போது அனைவரின் சந்தேகமும் ஒன்றாகத் திரும்பும்.

ஒருவேளை இது ஏதேச்சையாக நடந்து அவர்களும் இப்படி இதை கண்டுபிடித்து தந்திருந்தால் கூட பாக்கியராஜ் கூறியதை வைத்து பார்க்கும் போது இந்த மரணத்தின் பின்னணியில் இப்படி தேடுதல் நடத்தியவர்கள் தான் இருந்திருப்பார்களோ என சில குடும்பத்தாருக்கு சந்தேகம் வரும்.

இதனால் சம்பந்தப்பட்ட தேடுதல் வேட்டை நடத்திய நபர்களுக்கும் பிரச்சனைகள் வரலாம். இனி இது போன்று நிஜமாகவே யாராவது ஒருவர் ஆற்றில் மூழ்கி இறந்தால் கூட அவரது உடலை கண்டுபிடித்து மீட்பதற்கு இது போன்ற தேடுதலுக்கு ஆண்களை அழைத்தால் வர தயங்குவார்கள். இது போன்ற புதிய பிரச்சனைகளை பாக்யராஜின் இந்த வீடியோ கிளப்பி வைத்துள்ளது.

Must Read

spot_img