விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரி கிஷன். திரிஷா கதாபாத்திரத்தில் நடித்ததாலும் இந்த படத்தில் அவரது அழகான நடிப்பை வெளிப்படுத்தியதாலும் ரசிகர்களிடம் முதல் படத்திலேயே வரவேற்பை பெற்றார் கௌரி கிஷன். இதை தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் ஜோடியாக அடியே என்கிற படத்தில் நடித்திருந்தார் கௌரி கிஷன். இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் என்பவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்பாட் என்கிற படத்தை இயக்குகிறார் விக்னேஷ் கார்த்திக்.
நான்கு ஹீரோ ஹீரோயின்களை வைத்து இந்த படத்தை இவர் இயக்குகிறார். இதில் ஒரு கதாநாயகியாக கௌரி கிஷனும் நடிக்கிறார். அடியே படத்தில் ஆரம்பித்த இவர்கள் நட்பு அப்படியே இந்த படத்திலும் தொடர்கிறது. நட்பாக இருந்தால் நல்லது தான்.