spot_img
HomeNewsதிரையரங்குகளை மூடும் அளவிற்கு பிரச்சனையை பெரிதாக்கினாரா பாரதிராஜா ?

திரையரங்குகளை மூடும் அளவிற்கு பிரச்சனையை பெரிதாக்கினாரா பாரதிராஜா ?

சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் பெரிய படங்கள் மட்டுமே ஓரளவிற்கு தியேட்டர்களுக்கு வருமானம் ஈட்டி தருகின்றன. அதே சமயம் மீடியம் பட்ஜெட் படங்கள், சிறு பட்ஜெட் படங்கள் இவற்றால் தியேட்டர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த படங்களை வெளியிட திரையரங்குகள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை.

அப்படியே வெளியிட்டாலும் ரஜினி, விஜய் படங்களுக்கு வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணங்களையே இந்த படங்களுக்கும் வசூலிப்பதால் பார்வையாளர்கள் யாரும் இந்த படங்களை பார்க்க விரும்புவதில்லை. மேலும் இந்த படங்கள், வெளியான சில நாட்களிலேயே ஓடிடி தளங்களில் வந்து விடுவதால் பார்த்துக் கொள்ளலாம் என ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதை தவிர்க்கிறார்கள்.

இப்படி இரண்டு பக்கமும் பிரச்சனைகள் இருப்பதை முடிவுக்கு கொண்டு வர, பாரதிராஜாவை தலைவராகக் கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சமீபத்தில் திரையரங்குகளுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறிப்பாக ஐந்து கோடி பட்ஜெட்டுக்கு கீழ் உள்ள படங்களுக்கு 100 ரூபாய் மற்றும் 80 ரூபாய் கட்டணங்கள் வசூலிக்க வேண்டும் என்றும் பெரிய படங்களுக்கு அவர்கள் வழக்கம் போல வசூலித்துக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ள தயாராக இருந்தாலும் தயாரிப்பாளர்கள் தங்களது படங்கள் தியேட்டர்களில் வெளியாகிய எட்டு வாரம் கழித்துதான் ஓடிடியில் படங்களை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறி நான்கே வாரங்களில் ஓடிடி தளங்களுக்கு படத்தை கொடுத்து விடுகிறார்கள் என்றும் இதனால் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்களின் கூட்டம் குறைந்துவிட்டது என்றும் இவர்கள் மீது திருப்பி குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தினால் நாங்கள் திரையரங்குகளை மூடி விட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

Must Read

spot_img