spot_img
HomeNewsமுழு நேர அப்பாவும் இல்லை.. முழு நேர புருஷனும் இல்லை ; கமலின் புதிய கண்டுபிடிப்பு

முழு நேர அப்பாவும் இல்லை.. முழு நேர புருஷனும் இல்லை ; கமலின் புதிய கண்டுபிடிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே, அரசியலுக்கே வரமாட்டார் என அனைவரும் நினைத்திருந்த நடிகர் கமல்ஹாசன் திடீரென மக்கள் நீதி மையம் என்கிற தனது கட்சியை அறிவித்தார். அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அப்போது அவர் கூறினார்.

அதே சமயம் ஒரு பக்கம் கட்சி வேலைகள் நடந்தாலும் வழக்கம் போல நான் சினிமாவில் நடிப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதில் எல்லாம் எந்த மாற்றமும் இருக்காது.. ஏனென்றால் எனக்கு அரசியல் தொழில் இல்லை.. சினிமா தான் தொழில்.. அதன் மூலம் தான் நான் சாப்பிடுவதற்கான வருமானம் வருகிறது என்று அப்போது கூறினார்.

அதன் பிறகு வந்த தேர்தல்களில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது. விஜயகாந்த், சீமான் ஆகியோருக்கு கிடைத்த வரவேற்பில் நான்கில் ஒரு பங்கு கூட கமலுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இப்போது உள்ள இளம் நடிகர்களை விட அதிக எண்ணிக்கையிலான படங்களில் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து பலரும் கமல்ஹாசனை அவர் முழு நேர அரசியல்வாதியாக செயல்படவில்லை, அவர் பார்ட் டைம் அரசியில்வாதி என்று விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தனது கட்சி துவங்கி ஏழாம் வருடத்தில் அடி எடுத்து வைத்திருப்பதை தனது அலுவலகத்தில் கொண்டாடினார் கமல்ஹாசன்.

அப்போது தன்னை பற்றி விமர்சனம் குறித்து அவர் கூறும்போது, “முழு நேர அரசியல்வாதி இல்லை என என்னை சொல்கிறார்கள்.. சொல்லப்போனால் முழு நேர குடிமகனே இல்லை.. முழு நேர அப்பாவும் இல்லை.. முழு நேர புருஷனும் இல்லை.. ஏனென்றால் அவர்கள் எல்லா நேரமும் குடிமகனாகவோ அப்பாவாகவும் புருஷனாகவும் இருப்பதில்லை” என்று யாருக்கும் புரியாமல் பேசும் தனது பாணியில் இதற்கும் பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன்.

Must Read

spot_img