நடிகர் ஜீவா சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டன. அவரும் பல படங்களில் சிங்கிள் ஹீரோவாக, சில படங்களில் இரண்டு, மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்து வருகிறார். ஆனாலும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வெளியான கோ படத்தின் வெற்றி போல அவருக்கு இன்னொரு மிகப்பெரிய வெற்றி படம் அமையவே இல்லை.
காரணம் அவர் கதையை தேர்ந்தெடுக்கும் விதம் தான் என்றும் அவரால் வெற்றி படத்திற்கான கதையை தேர்வு செய்ய முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பல வெற்றிப் படங்களை, அருமையான கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரியின் மகன் தான் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜீவா நடித்த கோ திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. சமீப காலமாக திரையரங்குகளில் புதிய படங்கள் பெரிய வரவேற்பு பெறாத நிலையிலும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மாணவர்களின் தேர்வு காலம், அதற்கடுத்து கிரிக்கெட் போட்டி ஆகியவை தொடர்ந்து வர இருப்பதால் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் பழைய ஹிட் படங்களை மீண்டும் ரீலீஸ் செய்யும் போக்கு துவங்கியுள்ளது. அந்த வகையில் ஜீவாவின் கோ திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. எப்படியும் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் தேடி வரும். அதை பார்த்தாவது ஜீவா திருப்திப்பட்டு கொள்ள வேண்டியது தான்.