கடந்த இரண்டு நாட்களாக நடிகை திரிஷா பற்றி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒரு மோசமான அரசியல்வாதி ஒருவர் கூறிய வார்த்தைகள் தான் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த முறை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கப்பட்டபோது அந்தக் கட்சி எம்எல்ஏக்களை கட்டிக்காப்பதற்காக சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூர் பங்களாவில் அனைவரையும் தங்க வைத்திருந்தனர்.
அந்த சமயத்தில் அவர்களுக்கு வேண்டிய சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அப்படி ஒரு எம்எல்ஏ தனக்கு திரிஷா தான் வேண்டும் என கேட்டதாகவும் அவருக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து அழைத்து வரப்பட்டதாகவும் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அந்த பிரமுகர் ஒரு பேட்டியின்போது பகிரங்கமாகவே திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு பேசினார்.
இதனை தொடர்ந்து அவருக்கு மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் வெளியானது. அதன் பிறகு நான் திரிஷா குறித்து பேசவில்லை என மறுப்பதாக வருத்தம் தெரிவித்தார். அதேசமயம் திரிஷா பற்றி வெளியான தகவலுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவர் இயக்குனரும் நடிகருமான சேரன். அதைத் தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலரும், அவ்வளவு ஏன் கடந்த மாதம் திரிஷா குறித்து பேசியதாக அவதூறு வழக்கை சந்தித்து நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளான மன்சூர் அலிகான் கூட இந்த விவகாரத்தில் திரிஷாவுக்காக குரல் கொடுத்துள்ளார்.
ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை. குறிப்பாக திரிஷாவுடன் பல படங்களில் இணைந்து ஜோடியாக நடித்தவரும் கடைசியாக வெளியான லியோ படத்தில் இணைந்து நடித்தவருமான நடிகர் விஜய் கூட இந்த விஷயத்தில் தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகைக்காக ஒரு கண்டன குரல் கூட கொடுக்கவில்லை.
இத்தனைக்கும் இப்போதுதான் அவர் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். ஒரு அரசியல்வாதியாக கூட அவர் குரல் கொடுக்கவில்லை என்பது ஆச்சரியம் தான். அதே சமயம் இதற்கு வேறு ஒரு காரணமும் திரையுலையும் சொல்லப்படுகிறது. அதாவது தான் திரிஷாவுக்கு ஆதரவாக இந்த விஷயத்தில் குரல் கொடுத்தால் மற்ற எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் திரிஷா என்றதுமே கண்டன குரல் கொடுக்கிறாரே என தன் மீது தப்பான ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டு விடும் என்பதால் தான் விஜய் மௌனமாக இருந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.