spot_img
HomeNewsகுரலை டேமேஜ் பண்ண முயற்சி ; சூரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

குரலை டேமேஜ் பண்ண முயற்சி ; சூரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக கோலோச்சி வந்தவர் நடிகர் சூரி. அதன்பிறகு திடீரென வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. அந்த வகையில் அந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதில் சூரியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்னும் சில படங்களில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விடுதலை படத்தில் தனது வழக்கமான காமெடி பாணியிலான பேச்சிலிருந்து தனது குரலை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக இவர் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி பற்றி வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது.

இந்த படத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி வித்தியாசமாக குரலை மாற்றி பேச வேண்டும் என்பதற்காக தனது குடும்ப மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார் சூரி. குறிப்பாக தன்னுடைய குரலை சற்று டேமேஜ் பண்ணுவதற்கு ஏதாவது மருந்துகள் இருக்கிறதா என்று கேட்டு டாக்டரையே அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் சூரி .

ஆரம்பத்தில் டாக்டர் மறுத்தாலும் பின் சூரி அந்த படத்தில் இதன் தேவையை கூறியதும் வேறு வழியின்றி சில நாட்டு மருந்துகளை பயன்படுத்தி குரலை டேமேஜ் பண்ணும் வழிகளை சொல்லிக் கொடுத்துள்ளார். அதன்படி தான் சூரியும் அந்த படத்தில் பேசி நடித்தாராம். இப்படி கதாநாயகனான பிறகு இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து சூரி நடித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Must Read

spot_img