spot_img
HomeNewsஅண்ணன் இப்போ லவ் மூடில் இல்லை ; இயக்குனர் கௌதம் மேனன்

அண்ணன் இப்போ லவ் மூடில் இல்லை ; இயக்குனர் கௌதம் மேனன்

அழகியலுடன் கூடிய காதல் படங்களை எடுப்பதாகட்டும், ஆக்சன் படங்களை எடுப்பதாகட்டும் இரண்டிலுமே இயக்குனர் கௌதம் மேனன் மிகப்பெரிய வித்தைக்காரர். அதனாலேயே அவரது படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அப்படி மின்னலே படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் ஆகிய அவரது காதல் படங்கள் இப்போதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

குறிப்பாக இந்த படங்கள் ரீ ரீலீஸ் செய்யப்பட்டு பல நாட்களாக திரையரங்குகளில் இப்போதும் கூட ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கௌதம மேனன் இயக்கத்தில் ஏற்கனவே விக்ரமை வைத்து இயக்கி முடிக்கப்பட்ட துருவ நட்சத்திரம், அதேபோல இரண்டு வருடங்களுக்கும் முன்பே நடிகர் வருணை வைத்து அவர் இயக்கிய ஜோஷ்வா ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இதில் ஜோஸ்வா திரைப்படம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது, இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்ற போது அடுத்ததாக எப்போது காதல் படங்கள் இயக்குவீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு இப்போது நான் காதல் மூடில் இல்லை.. எனக்கு எப்போது காதல் மூடு வருகிறதோ அப்போது நிச்சயமாக காதல் படங்களை இயக்குவேன் என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்.

Must Read

spot_img