spot_img
HomeNewsவிஜய்யின் இலவச ஆம்புலன்ஸை பணம் கொடுக்காமல் பயன்படுத்த முடியாது ? ஏன் தெரியுமா ?

விஜய்யின் இலவச ஆம்புலன்ஸை பணம் கொடுக்காமல் பயன்படுத்த முடியாது ? ஏன் தெரியுமா ?

விஜய் தனது ரசிகர்கள் அனைவரையும் மக்களுக்கான நலத்திட்ட பணிகளில் ஈடுபடும் விதமாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதைத் தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், ரத்த தான உதவி, மருத்துவ உதவி, அன்னதானம் என பல திட்டங்களை அவரது ரசிகர் மன்றத்தினர் செயல்படுத்தி வருகின்றனர்.

இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக இலவச ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆம்புலன்ஸை பயன்படுத்த அதன் ஓட்டுனர்கள் ஆயிரம் ரூபாயிலிருந்து அதற்கு அதிகமான தொகையை தூரத்திற்கு ஏற்றார் போல் கேட்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஆடியோ ஒன்றும் சமீபத்தில் வெளியானது.

இலவச சேவை ஆம்புலன்ஸில் எதற்காக பணம் வாங்குகிறார்கள் என்று விசாரித்த போது எந்த ஒரு ஆம்புலன்ஸும் விஜய் மக்கள் இயக்க பணத்தில் சொந்தமாக வாங்கப்படவில்லையாம். ஏற்கனவே வேறு ஒரு தனியார் நிறுவனத்திற்காக இயங்கி வந்த ஆம்புலன்ஸை, தற்போது காண்ட்ராக்ட் அடிப்படையில் விஜய் மக்கள் இயக்க சேவைக்காக இணைத்துக் கொண்டு அதை வைத்து ஒப்பேற்றி வருகின்றனர்.

அப்படி அந்த ஆம்புலன்ஸ் சேவையை சம்பந்தப்பட்ட அந்த நிறுவனமே பயன்படுத்தி கொண்டிருக்கும் போது விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரை சொல்லி யாராவது இலவச சேவைக்கு கேட்டால் பழக்க தோஷத்தில் டிரைவர்கள் பணம் கேட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம் விஜய் டிவியில் புகழ்பெற்ற கே பி ஒய் பாலா என்பவர் தான் சம்பாதித்த சொந்த பணத்தில் தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு ஆம்புலன்ஸ்கள் வரை மக்களின் சேவைக்காக சொந்தமாகவே வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆம்புலன்ஸ் சேவையில் இப்படி மட்ட ரகமாக நடந்து கொள்வது விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே கூட சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

Must Read

spot_img