spot_img
HomeNewsஎன்னடா முழிக்கிற ? கோட் படப்பிடிப்பில் விஜய்யிடம் சிக்கிய வெங்கட் பிரபுவின் சிஷ்யன்

என்னடா முழிக்கிற ? கோட் படப்பிடிப்பில் விஜய்யிடம் சிக்கிய வெங்கட் பிரபுவின் சிஷ்யன்

வெங்கட் பிரபு சாதாரண படம் இயக்கினாலும் சரி முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களை இயக்கினாலும் சரி அவற்றில் எல்லாம் வெங்கட் பிரபுவுக்கு என இருக்கும் அவரது ஆஸ்தான நடிகர்களில் சிலர் எப்படியாவது இடம் பெற்று விடுவார்கள். அவரது தம்பி பிரேம்ஜியை தவிர்த்து வைபவ், அரவிந்த் ஆகாஷ், மிர்ச்சி சிவா என இப்படி சிலர் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது விஜய்யை வைத்து கோட் என்கிற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான வைபவ்வும் நடிக்கும் வாய்ப்பை பெற்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் மற்றும் வைபவ் நடிக்கும் காட்சிகளை வெங்கட் பிரபு படமாக்கினார். அப்போது விஜய் காட்சிகள் குறித்து சந்தேகம் கேட்க, வைபவோ என்ன காட்சி படமாக போகிறது என்பது தெரியாமல் அப்பாவி போல முழித்துள்ளாராம்.

அதை பார்த்த விஜய் என்னடா ஒன்னும் தெரியாதது போல முழிக்கிறாய் என்று கேட்க, உங்களுக்காவது கதை தெரியும்.. அதனால் நீங்கள் அதில் சந்தேகம் கேட்கிறீர்கள்.. எனக்கு கதை என்னவென்று தெரியாது.. அதனால் தான் முழித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூற விஜய்யே சிரித்து விட்டாராம்.

வெங்கட் பிரபு பொதுவாக தன்னுடைய சிஷ்ய பிள்ளை நடிகர்களிடம் உனக்கு இந்த படத்தில் ஒரு கேரக்டர் இருக்கிறது என்று மட்டும் தான் சொல்வார். படப்பிடிப்பு வந்தபின் தான் அவர்களிடம் காட்சிகளை விளக்குவார் என்பதால் தான் வைபவ் அப்படி முழித்துள்ளார்.

Must Read

spot_img