கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியில் அனிமல் என்கிற படம் வெளியானது. நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு அர்ஜுன் ரெட்டி என்கிற படம் மூலம் மிகப்பெரிய புகழை பெற்று தந்த இயக்குனர் சந்தீப் ரெட்டி இந்த படத்தை இயக்கியிருந்தார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
அதே சமயம் இந்த படம் வெளியான நாளிலிருந்து பெண்களை அவமரியாதை செய்யும் விதமாக உருவாகி இருக்கிறது என்று பல தரப்பினரும் குறிப்பாக திரையுலக சேர்ந்த பிரபலங்களை கூட கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும் இந்த படம் ஆயிரம் கோடி வசூலித்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ பேசும்போது இந்த படத்தை போட்டு தாக்கு தாக்கு என தாக்கி விட்டார்.
நான் இந்த படத்தை பார்க்கவில்லை.. ஆனால் பார்த்தவர்கள் இந்த படம் பெண்களை மோசமாக சித்தரிக்கிறது என்று கூறினார்கள். அதனால் என் மகள்களிடம் இந்தப்படத்தை பார்க்க வேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால் அவர்கள் இதை எங்கள் ஜெனரேஷனுக்கான படம்.. நாங்கள் பார்ப்போம் என்று கூறி இந்த படத்தை பார்த்தார்கள்..
ஆனால் பார்த்துவிட்டு அம்மா தயவு செய்து இந்த படத்தை நீ பார்த்து விட வேண்டாம்.. நாங்களும் உன் பேச்சை மீறி பார்த்ததற்காக வருத்தப்படுகிறோம் என்று கூறினார்கள். இன்றைய இளைஞர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.