என்னதான் கவுதம் மேனன் படங்கள் ரிலீசின் போது பிரச்சனைகளை சந்தித்தாலும் அவரது படத்திற்கான ரசிகர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு டைரக்சனில் மாஸ் காட்டி வரும் கவுதம் மேனன் இன்னொரு பக்கம் தற்போது பிஸியான நடிகராகவும் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் கூட மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் கவுதம் மேனன். இது தவிர மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ட்ரான்ஸ் என்கிற படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தினார். இதை தொடர்ந்து மலையாளத்திலும் அவரை நடிப்பதற்கு தொடர்ந்து அழைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் பசூக்கா என்கிற படத்தில் நடித்த வருகிறார் கவுதம் மேனன். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் பெஞ்சமின் ஜோஸ்வா. இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த ஜோஸ்வா என்கிற பெயரில் தான் கவுதம் மேனன் தமிழில் ஒரு படம் இயக்கியுள்ளார். அந்த படமும் வரும் மார்ச் எட்டாம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படி அவர் இயக்கியுள்ள படத்தின் டைட்டிலும் அவர் நடிக்கும் படத்தில் அவரது கதாபாத்திர பெயரும் ஒன்றாக இருப்பதால் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கவுதம் மேனன் இன்னும் குஷியாகி விட்டார்.