spot_img
HomeNewsஓரினச்சேர்க்கையாளராக நடித்த மம்முட்டியை நேரில் சென்று பாராட்டிய சமந்தா

ஓரினச்சேர்க்கையாளராக நடித்த மம்முட்டியை நேரில் சென்று பாராட்டிய சமந்தா

திரைப்படங்களில் சிறப்பாக நடிக்கும் நட்சத்திரங்களை நடிகை சமந்தா எப்போதாவது பாராட்டுவதை பார்த்திருக்கிறோம். அந்த அளவோடு நிறுத்திக் கொள்வாரே தவிர ஒருவரை பாராட்டியதோடு, ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு தானாகவே அவரை நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார் என்றால் அவர் வேறு யாருமில்லை.. மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி தான்..

அப்படி மம்முட்டியை சந்தித்தபோது அவர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் சமந்தா. இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம் தெரியுமா ?

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான காதல் ; தி கோர் என்கிற படத்தில் நடிகர் மம்முட்டி ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த படத்தை பார்த்துவிட்டு நடிகை சமந்தா அப்போதே மம்முட்டியின் நடிப்பு குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சமந்தா. இந்த நிலையில் மம்முட்டியை நேரில் சந்திப்பதற்கு அங்குள்ளவர்கள் மூலமாக ஒரு வாய்ப்பை உருவாக்கி அவரை நேரில் சென்று சந்தித்து பாராட்டியதுடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் சமந்தா.

Must Read

spot_img