ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சமீபத்தில் லால் சலாம் என்கிற படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த படம் வழக்கமான ரஜினி படங்கள் பெறும் வெற்றியில் நான்கில் ஒரு பங்கை கூட பெற முடியவில்லை. காரணம் எப்போதுமே ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தால் மட்டுமே அவரது படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். அவர் இப்படி இது போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வசூலித்தது இல்லை.
அதனால் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஐஸ்வர்யா படம் இயக்கி இருந்தாலும் லால் சலாம் படம் ஐஸ்வர்யாவுக்கு ஒரு தோல்வி படமாகவே அமைந்து விட்டது என்று தான் சொல்கிறார்கள். இந்த நிலையில் இந்த தோல்வியால் தேங்கி நிற்காமல் அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டாராம் ஐஸ்வர்யா.
இந்த படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா சொன்ன கதையும் சித்தார்த்திற்கு பிடித்து விட்டதாம். அதே சமயம் இந்த ஒன்லைனை பவுண்டேட் ஸ்கிரிப்ட் ஆக முழுவதுமாக என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள் என்று ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம்.
சில மாதங்களுக்கு முன்பு என்றால் கண்ணை மூடிக்கொண்டு படத்தில் நடிக்க தயார் என சொல்லி வந்த சித்தார்த், சமீபத்தில் வெளியான சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து கதை கேட்பதில் கொஞ்சம் நிதானம் காட்டி தேர்வு செய்கிறார், அதனால் தான் முழு கதையும் வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் கராறாக கூறி விட்டாராம்,