மலையாளத்தில் முன்னணி நடிகராக நடித்து வரும் மெகா ஸ்டார் மம்முட்டிக்கு 72 வயது ஆகிறது. ஒரு பக்கம் வித்தியாசமான கதைக்களங்களில் வயதான தோற்றங்களில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆக்சன் படங்களிலும் தவறாமல் நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் நடித்து வரும் படம் தான் பசூக்கா.
புலி முருகன் என்கிற ஹிட் படத்தை இயக்கிய வைசாக் என்பவர் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கியவர். இந்த பசூக்கா திரைப்படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைய உள்ளன. இதற்காக மம்முட்டியை படப்பிடிப்பில் பெண்டு நிமிர்த்து விட்டார் வைசாக்.
ஆனாலும் சமீபத்தில் இது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள இயக்குனர் வைசாக், “என்னை மன்னித்து விடுங்கள் மம்முக்கா. நீங்கள் சொல்லியும் கூட உங்கள் வயதை பொருட்படுத்தாமல் உங்களை சிரமப்படுத்தி விட்டேன். ஆனாலும் உங்களுக்கு வயதானதாகவே என்னால் நினைக்கத் தோன்றவில்லை. 45-50 வயது தான் என் மனதில் உங்களை பார்க்கும் போது நினைக்க தோன்றுகிறது. இந்த படத்தில் எனது நம்பிக்கையே நீங்கள் தான்” என்று கூறியுள்ளார்.