முன்பெல்லாம் சினிமாக்களில் எல்லா விஷயங்களையும் தைரியமாக சொல்லிவிட முடியாது. ஆனால் சமீப காலமாக ஓடிடி தளங்கள் வந்த பிறகு வெப் சீரிஸ் என்கிற பெயரில் துணிச்சலான சில முயற்சிகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி எடுக்கப்படும் வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் சில சர்ச்சையை ஏற்படுத்தும் காட்சிகளைக் கூட துணிச்சலாக இதில் இடம்பெற செய்கின்றனர்.
இவற்றில் நல்லவையும் இருக்கின்றன. கெட்டவையும் இருக்கின்றன. அப்படி சில நல்ல விஷயங்கள் சமூகத்தில் இது போன்ற வெப் சீரிஸை பார்ப்பவர்களை சில மாற்றங்களுக்கு தூண்டிவிடுகின்றன. அப்படி சமீபத்தில் யானை தந்தங்களை வெட்டி கடத்தும் கும்பல் பற்றி உருவாகி உள்ள போச்சர் என்கிற வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. யானை தந்தங்களை கடத்துவதன் பின்னணியில் உள்ள அரசியலையும் இது அப்பட்டமாக தோலுரித்துள்ளது
சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு இந்த வெப் சீரிசை பார்த்து அரண்டு போய்விட்டாராம். இப்படி யானைத் தந்தங்களை வெட்டுபவர்களுக்கு மனசாட்சியே இல்லையா, அவர்கள் கை நடுங்காதா, அரசாங்கம் உடனடியாக இதுபோன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.