இயக்குனர் கௌதம் மேனன் போல இயக்குனர் மிஷ்கினும் வித்தியாசமான படங்களை கொடுக்கக்கூடிய இயக்குனர் தான். அவரது டைரக்சனிலும் நடிக்க பல ஹீரோக்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள். ஆனால் என்ன, ஒரு படத்தில் நடித்ததுமே அவருக்கும் ஹீரோவுக்கும் முட்டிக்கொண்டு அடுத்த படத்திலேயே பிரிந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் முதன்முறையாக ட்ரெயின் என்கிற படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இவ்வளவு நேரம்தான் எனக்கு கணக்கில்லாமல் இரவு வரை கூட திடீர் திடீரென படப்பிடிப்பை நீடித்து நடத்தி வருகிறார் மிஷ்கின்.
அதே சமயம் விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே இரண்டு மூன்று படங்கள் முடிவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. மிஷ்கின் படத்தில் இப்படி நேரம் காலம் பார்க்காமல் விஜய் சேதுபதி நடித்து வருவதால் ஒரு குறிப்பிட்ட நிலையான நேரத்தை மற்ற படங்களின் டப்பிங்கிற்காக விஜய் சேதுபதியால் ஒதுக்க முடியவில்லை.
இதனால் அவரது மற்ற படங்களும் குறித்த நேரத்தில் டப்பிங் முடித்து அடுத்த கட்ட பணிகளுக்கு ரிலீசுக்கும் செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி தனது காட்சிகளை நடித்து முடிக்கும் வரை இதே நிலைதான் என்கிறார்கள் படக்குழுவினர்.