தமிழ் சினிமாவில் படத்திற்கு கதை கூட எளிதாக பிடித்து விடுவார்கள். ஆனால் அதற்கேற்ற டைட்டிலை வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சிலருக்கு மட்டும் எப்படியாவது டைட்டில் நன்றாக அமைந்துவிடும். சிலர் டைட்டிலுக்காக ரொம்பவே மெனக்கெட மாட்டார்கள். ஏற்கனவே பல பிரபல ஹீரோக்கள் பேசிய பஞ்ச் டயலாக்குகள், அவர்கள் பாடிய பாடல்களின் வரிகள் இவற்றிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற வார்த்தைகளையே தங்கள் படத்துக்கு டைட்டிலாக வைத்து விடுவார்கள். படத்திற்கு இது ஒரு விளம்பரமாக அமைந்து விடும்.
அந்த வகையில் நடிகர் சந்தானம் சமீப காலமாக கவுண்டமணி பட வசனங்களை தனது படத்திற்கு டைட்டிலாக வைத்து வந்தார். டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி என கவுண்டமணி பேசிய வார்த்தைகள் இவரது படத்திற்கு டைட்டில் ஆக மாறி விளம்பரத்தையும் பெற்று தந்தன.
இந்த நிலையில் தற்போது ஆனந்த் கிருஷ்ணன் என்கிற இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்திற்கு ‘இங்க நான் தான் கிங்கு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசி நடித்து மிகவும் பிரபலமான வசனம். அதனால் இனி வரும் காலங்களில் சந்தானத்திற்கு தனது படங்களுக்கு டைட்டில் வைப்பதற்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லலாம்.