சினிமாவின் ஒன்று, இரண்டு ஹிட் படங்களில் ஜோடியாக இணைந்து நடித்த நாயகன், நாயகி காதலின் விழுவது சகஜம் தான். அப்படி கடந்த சில வருடங்களாகவே காதலிக்கிறார்களோ என்று கிசுகிசுக்கப்படும் ஜோடி தான் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி. 2 படங்களில் மட்டுமே இவர்கள் இணைந்து நடித்திருந்தாலும் இப்போது வரை இவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.
ஆனால் சில சமயங்களில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களோ என்கிற சந்தேகத்தையே ரசிகர்களிடம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. இந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் சிலர் கேட்டுக் கொண்டார்கள் என்பதற்காக வரப்போகும் பொதுத்தேர்வை நன்றாக எழுதுவதற்கு வாழ்த்து கூறி இருந்தார்.
தேர்வில் நல்ல வெற்றி பெற்றால் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன் என வாக்குறுதியும் கொடுத்திருந்தார். இவர் இப்படி கூறி சில நாட்கள் கழித்து தற்போது நடிகை ராஷ்மிகாவும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இப்படி விஜய் தேவரகொண்டாவை அடுத்து சில தினங்களிலேயே ராஷ்மிகாவும் அதேபோல செய்வது இவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் காதலையும் தான் வெளிப்படுத்துகிறது என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்..