பொதுவாக பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் ஸ்ரீ.. நல்ல படங்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெரும்போது திரையுலகில் இருக்கும் மிகப்பெரிய பிரபலங்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிற்கு தங்களது பாராட்டுகளை தெரிவிப்பது உண்டு.
இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே முதல் நபராக இருப்பார். சின்ன படங்களை கூட பார்த்துவிட்டு படத்தை பாராட்டுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்களையும் தனது வீட்திற்கே வரவழைத்து வாழ்த்துவார். இவரது இந்த செயல் இன்னும் படம் பார்க்காதவர்களை கூட தியேட்டருக்கு அழைத்து வரும்.
இப்படி ஒரு சில பிரபலங்கள் இருக்கையில் மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் வெளியானது. மருத்துவமனையில் இன்சூரன்ஸை மையமாக வைத்து நடக்கும் மோசடியை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி இருந்தது. கேரளாவையும் தாண்டி தமிழ்நாட்டிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது.
அதே சமயம் இந்த படத்தை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்த்துள்ளார் நடிகர் பிரித்விராஜ். உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இயக்குனருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த படத்தை தான் பார்க்க வேண்டும் என தனது வான்டட் லிஸ்டில் வைத்திருந்ததாகவும் ஆனால் பிஸியான வேலைகளால் பார்க்க முடியாமல் போய்விட்டது இப்போதுதான் பார்த்தேன் என்றும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.
ஆனாலும் ரசிகர்கள் இவர் என்ன இத்தனை நாட்கள் கோமாவிலா இருந்தார் என இவரது பாராட்டு குறித்து கிண்டல் அடித்து வருகின்றனர்.