நடிகர் ரஜினிகாந்த் கோடி கோடியாக சம்பாதிக்கிறார். ஆனால் அவர் மழை, வெள்ளம் போன்ற விஷயங்களுக்கு கூட பெரிய அளவில் உதவ மாட்டேன் என்கிறார் என்பது போன்று அவரை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். ஆனால் இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்கிற பாணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பலருக்கும் பல நேரங்களில் பலவிதமாக உதவி வருகிறார். இந்த உதவிகளை பெற்றவர்களே வெளியில் வந்து இது பற்றி பேசும் போது தான் அந்த உண்மை தெரிய வருகிறது.
அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் வி.கே ராமசாமி. அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ரஜினி. ஒரு கட்டத்தில் கார்த்திகை வைத்து சொந்த படம் எடுத்து நட்டம் அடைந்து எல்லா பணத்தையும் இழந்து விட்டார் வி.கே ராமசாமி. இதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், தான் தயாரித்து நடித்த அருணாச்சலம் என்கிற படத்தில் எட்டு தயாரிப்பாளர்களில் ஒருவராக விகே ராமசாமியையும் இணைத்துக் கொண்டார்,
இதற்காக அவரிடம் எந்த பணமும் பெறாமல் தனது பணத்தை வைத்து படத்தை தயாரித்து படம் வெளியான பிறகு அதில் கிடைத்த லாபத்தை போல இருமடங்கு பணத்தை வி கே ராமசாமிக்கு கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதன் பிறகு ஒரு நாள் ஒரு நிருபர் வி கே ராமசாமியை பேட்டி எடுக்க சென்றபோது தனது பூஜை அறைக்குள் அவரை அழைத்துச் சென்று காட்டினார் வி.கே ராமசாமி.
அங்கே கடவுள் படங்களுடன் ரஜினிகாந்தின் படமும் இடம்பெற்று இருந்தது. அந்த நிருபர் அதிர்ந்து போக, என்னுடைய தெய்வம் ரஜினிகாந்த் என்று கண்கலங்கி கூறினாராம் வி.கே ராமசாமி. இது போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
தற்போது சமீபத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் லால் சலாம் படத்தில் நடித்தபோது அவரது மனைவிக்கு இருதய பிரச்சினை காரணமாக ஆபரேஷன் செய்ய கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் உடனடியாக தேவைப்பட்டது. செய்வதறியாது திகைத்து நின்ற லிவிங்ஸ்டன் இது பற்றி படப்பிடிப்பில் இருந்த சக நடிகர்கள், தொழிலாளிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இது எப்படியோ ரஜினியின் காதுக்கு போனதும் உடனடியாக 15 லட்சத்தை லிவிங்ஸ்டனிடம் கொடுத்து என்னிடம் கேட்கக் கூடாதா, நீ என் தம்பி மாதிரி.. இது போதாது என்றால் இன்னும் கேள்.. தருகிறேன்.. முதலில் மனைவியை காப்பாற்று என்று கூறினாராம். அவர் கொடுத்த அந்த பணத்தினால் தனது மனைவியை காப்பாற்றி விட்டார் லிவிங்க்ஸ்டன்.
இது பற்றி சமீபத்தில் அவர் கூறும்போது, “இன்று என் மனைவி உயிரோடு இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான்.. எனக்கு மட்டுமல்ல எனது மகள்களுக்கும் கூட ரஜினிகாந்த் தான் எங்கள் தெய்வம். அதனால் அவரது படத்தை பூஜை அறையில் வைக்க வேண்டும் என கூறி அவரது படத்தை நாங்கள் அங்கே வைத்து வழிபடுகிறோம்” என்று கூறியுள்ளார்.