நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்வதற்கு முன்பே தங்கள் வீடுகளிலும் வெளிநாடு செல்லும்போதும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மகிழ்வதும், பலரை வெறுப்பேத்துவதும் உண்டு. திருமணம் ஆன பிறகும் குழந்தைகள் பெற்ற பிறகும் கூட இன்னும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியான இவர்களது ஒரு வீடியோ மிகப்பெரிய அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. அந்த வீடியோவில் இவர்கள் அருகில் உள்ள ஒருவர் வயலினில் ஒரு பாடலை இசைக்கிறார். அவர் அந்த பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு அதை இசைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த பாடலால் கவரப்பட்டு ஆச்சரியப்பட்ட நயன்தாரா அருகில் இருக்கும் விக்னேஷ் அவனை அன்புடன் கட்டித் கொள்கிறார்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவரை நெருங்கி கதாநாயகன் கதாநாயகி செய்வது போன்ற ரொமான்ஸ் காட்சிகளை இருவரும் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இத்தனைக்கும் இதனை யாரோ ஒருவர் வீடியோ எடுக்கிறார் என்பதுதான் ஆச்சரியம். அப்படி எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் கணவன், மனைவி இருவரும் அன்னியோன்யமாக இருந்தாலும் பொது வெளியில் வெளியாகும் வீடியோவில் இதுபோன்று நடந்து கொள்ளலாமா என்று சோசியல் மீடியாவில் பலரும் தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.