நடிகர் சத்யராஜ் 90 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து வந்தவர். அப்படியே காலப்போக்கில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி பாகுபலி படத்தில் அவர் நடித்த பிறகு அவருக்கு என குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தாலும் ஒரு மார்க்கெட் உருவாகிவிட்டது. பல நிகழ்வுகளுக்கு அவரை பேச அழைக்கின்றனர்.
அப்படி சமீபத்தில் ஒரு மறுவாழ்வு மைய திறப்பு விழாவில் சத்யராஜ் கலந்துகொண்டு வயதானவர்கள் தங்களது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி கூறினார். அப்படி அவர் பேசும்போது, “வயதானவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் ஸ்ட்ரெச்சிங்.. அதாவது கை கால்கள் ரப்பர் போல வேகமாக செயல்படுவது குறைவது தான்..
என்னை சமீப காலங்களில் படப்பிடிப்புகளில் நீங்கள் கீழே சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுங்கள் என காட்சி எடுப்பதாக கூறினால், முதலில் நான் நிற்கும் போது காட்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அமர்ந்த பின்பு அதைக் காட்சியாக எடுத்துக் கொள்ளுங்கள், அதை விட்டுவிட்டு நான் கை காலை ஊன்றி தள்ளாடி அமர்வது படம் ஆக்கினால் அசிங்கமாக இருக்கும் என்று சொல்லி விடுவேன்.
இது பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் சிரமம் தான். அதனை தவிர்ப்பதற்காகவே தான் தற்போதெல்லாம் தினசரி 2 மணி நேரம் எப்படியாவது நடந்து விடுகிறேன். படப்பிடிப்பில் இருந்தாலும் கூட என்னுடைய காட்சிகள் முடிந்து விட்டால் கேரவனுக்குள் சென்று கேரமவனுக்குள்ளேயே நீண்ட நேரம் நடந்து அதை சரி செய்து கொள்கிறேன்” என்று கூறினார்.
கேரவனுக்குள் நடிகர்கள் ஓய்வேடுபார்கள், தூங்குவார்கள் என கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் கேரவனுக்குள் நடப்பார்கள் என்பதை சத்யராஜ் சொல்லித்தான் தெரிந்து கொள்கிறோம்,