ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த கார்டியன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஹன்சிகா மோத்வானி ராசியில்லாத பெண்ணாக வளர்கிறார். படித்து முடித்து வேலை தேடும் போதும் துரதிர்ஷ்டம் அவரை தொடர்ந்து விடாப்பிடியாக துரத்துகிறது. இந்நிலையில் பட்டதாரி படிப்பிற்கான செயல்முறை பயிற்சிக்கு கட்டிட கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக அவருடைய காலில் சிறிய விபத்து ஏற்படுகிறது. அதன் போது அவருக்குள் ஒரு அமானுஷ்ய சக்தி உண்டாகிறது.
அதன் பின் அவர் என்ன நினைத்தாலும் அது நடக்கிறது. அதனை அவர் உணர்ந்த பின்னர் மீண்டும் சாதாரண பெண்மணியாக பெண்ணாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அப்போதுதான் அவருக்கு தன்னுள் ஒரு பெண்மணியின் ஆவி புகுந்திருக்கிறது என்பதையும், அந்த ஆவி தன் உயிரை மாய்த்து , தன்னுடைய ஒரே பெண் குழந்தையை தனியாக தவிக்க விட்ட.. இந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நான்கு ஆண்களை பழி வாங்குவதற்காக ஹன்சிகாவின் உடலில் புகுந்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. அதற்குப்பின் என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.
வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதை. இதில் ஆவியை இணைத்து கமர்சியலாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் வழக்கமான காட்சிகளும், எந்த எதிர்பாராத டிவிஸ்ட்டும் இடம்பெறாததாலும் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது.
ஹன்சிகா முகத்தில் இளமையை தொலைத்திருப்பதால், வித்தியாசமான ஒப்பனையுடன் ஆவியாக தோன்றும் ஹன்சிகாவை ரசிக்க முடிகிறது. ஆடிட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை தியாவின் நடிப்பு பிரமாதம். வில்லன்களாக நடித்திருக்கும் நால்வரில் சுரேஷ் மேனன் மனதில் பதிகிறார்.
ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல்,திரைக்கதையில் இருக்கும் உணர்ச்சிகளை காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
திகில் படங்களுக்கு பின்னணி இசை பெரும்பலம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் சாம்.சி.எஸ்.பாடல்கள் இரசிக்க வைக்கின்றன.
ஓரளவு இன்ட்ரெஸ்டிங்கான ஒன்லைனை நல்ல அவுட்லைனாக மாற்ற முயற்சித்துள்ளார் குரு சரவணன். பெரிதாக தொய்வு இல்லாத திரைக்கதை நம்ம போரடிக்கவில்லை. மேக்கிங்கிலும் குரு சரவணன், சபரி கூட்டணி நல்ல அவுட்புட்-ஐ வழங்கியுள்ளது