ஊர்வசி முதன்மை கதாபாத்தில் நடிக்க தினேஷ், மாறன் மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம ஜே பேபி.
கதைக்களம்
கல்கத்தா சென்று விட்ட தன் தாயை அழைத்து வர செல்லும் மகன்கள் இருவரின் உணர்ச்சிப் போராட்டமே ஜே பேபி கதை இரு வரிக்குள் இருந்தாலும் தன் திரைக்கதையின் மூலம் இயக்குனர் படம் பார்க்கும் அனைவருக்கும் நம் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டி விட்டார். முதல் பாராட்டு அவருக்கு தான்.
வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அந்த வாழ்க்கைக்குள் சொந்தங்களுக்குள் ஈகோ, பொறாமை என நட்பு பாராட்டாமல் பகையை வளர்ப்பது ஏன் என்று கேட்கும் இயக்குனரின் வசனம் படம் பார்க்கும் அனைவரின் நெஞ்சையும் ஒரு கீறலை கீறிவிட்டது.
நடிப்பு ராட்சசி என சிறப்பாக நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள் சுட்டும் பெயர் ஆனால் அதையும் மீறி ஒரு வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறேன். ஊர்வசி நடிப்பை பாராட்ட அது நடிப்பா இயல்பா எதார்த்தமா என்று என்று தெரியாமல் பின்னி பெடல் எடுத்து விட்டார் ஊர்வசி. ஆண் பெண் சிறந்த நட்புக்கு ஒரு உதாரணம் சொல்வார்கள் நட்புக்கு மேலே காதலுக்கு கீழே அதை போல் ஊர்வசியின் கதாபாத்திரம் பாசத்துக்கு மேலே பைத்தியத்துக்கு கீழே என்பது போல் அவர் மனநலம் சரியில்லாதவர் என்பதற்கு இப்படி கூறலாம். எந்த ஒரு இடத்திலும் இயல்பை மீறாமல் நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார்.
மனநல மருத்துவமனையில் மனநலம் குன்றியவர்களுக்கு இவர் செய்யும் சேவை அட அட அட அட இவர் மனநலம் குன்றியவரா என்பதை சந்தேகிக்கும் வகையில் தன் நடிப்பை செம்மையாக்கி இருக்கிறார். தன் மகன்கள் மீதும் காட்டும் பாசத்திற்கு நம் தாயும் இப்படி தானே நம்மை வளர்த்தால் என்று படம் பார்க்கும் ஒவ்வொரு மனதும் ஏங்க வைத்துவிட்டார். ஊர்வசி இந்த வருடத்தின் சிறந்த நடிகை விருதை இவருக்கு தராவிட்டால் அந்த விருதுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். அப்படி வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
படத்தில் தினேஷ் நாயகனாக இருந்தாலும் ஒரு மகனாக சகோதரனாக கணவனாக என பல வித பரிமாணங்களை சிறப்பாக செய்து இருக்கிறார். பல படங்களில் காமெடி வேடங்களில் கலக்கிய மாறனை இந்த படத்தில் ஒரு குணச்சித்திர நாயகனாக வலம் வருகிறார்.
மாறன் காமெடி மட்டுமல்ல குணச்சித்திரமும் தன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார் மாறன். பேச்சுவார்த்தை இல்லாத தன் தம்பி தினேஷ் உடன் தாயைத் தேடி கொல்கத்தா செல்லும் மாறன் தம்பி தினேஷ் தானே வந்து பேசினாலும் பேசாத பேசாத போ போ என்று இவர் பேசும் வசனம் பல அண்ணன் தம்பிகளின் ஈகோவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். இயக்குனர் சுரேஷ் மாரிக்கு எத்தனை முறை வாழ்த்து சொன்னாலும் அது ஈடாகாது. அந்த அளவுக்கு திரைக்கதையை செதுக்கியிருக்கிறார். ஒரு உணர்ச்சிகரமான பந்தத்திற்கு ள் பாசப் போராட்டங்களை எந்த ஒரு இடத்திலும் மிகைப்படுத்தாமல் எதார்த்தத்தை எளிமையாக மக்கள் ரசிக்கும் வண்ணமாக சிறப்பாக செய்திருக்கிறார். எதிர்காலத்தில் விரல் விட்டு என்னும் இயக்குனர்கள் வரிசையில் பிடிப்பார் என்பது ஐயமில்லை
ஜே பேபி>>>> இது உணர்வுகளின் உணர்ச்சி குவியல்