நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளாகவே நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ் பெற்ற நடிகையாக மாறிவிட்டார். தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும் இவருக்கு ஏற்ற ஜோடி என பலரும் நினைப்பது நடிகர் விஜய் தேவரகொண்டாவைத்தான்.
காரணம் கீதா கோவிந்தம் என்கிற படத்தின் மூலம் தான் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பாப்புலரானது. அதன்பிறகு டியர் காம்ரேட் என்கிற ஒரு படத்தில் நடித்ததோடு சரி.. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வேறு எந்த படத்திலும் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை.. இந்த நிலையில் அவ்வப்போது எங்காவது பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக தலை காட்டினார்கள் என்றால் உடனே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு பரவ இப்போது இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள்.
அதேசமயம் வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ இவர்கள் தனித்தனியாக சென்றாலும் கூட அவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் பேக்ரவுண்டை வைத்து இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் தான் தங்கி இருக்கிறார்கள், ஒன்றாகத்தான் சுற்றி இருக்கிறார்கள் என்று ரசிகர்களாக சில யூகங்களை கிளப்பி இவர்களுக்குள் காதல் இருப்பதாக தற்போதும் கூறி வருகிறார்கள்.
இதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் ஒரு பிங்க் கலர் குல்லாவை அணிந்து தனது புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார் ராஷ்மிகா. உடனடியாக ரசிகர்கள் தங்கள் கூகுள் வேட்டையை ஆரம்பித்து இதற்கு முன்னதாக இதே கலர் தொப்பியை நடிகர் விஜய் தேவரகொண்டா அணிந்து இருந்தார் என அந்த வீடியோவையும் எடுத்துப்போட்டு, பார்த்தீர்களா அவருடைய தொப்பியைத்தான் இவர் அணிந்திருக்கிறார்.. அந்த அளவிற்கு இவர்கள் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்று கூறி வருகிறார்கள். ரசிகர்கள் சும்மா இருந்தாலும் ராஷ்மிகா அவர்களை சும்மா விடமாட்டார் போல தான் இருக்கிறது இது போன்ற விஷயங்கள்..