சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட்டால் அந்த நடிகையின் மார்க்கெட் நிலவரம் எங்கோ உச்சத்துக்கு போய்விடும்.. அதுவரை 10 லட்சம், 20 லட்சம் என வாங்கியவர்கள் ரஜினியுடன் நடித்த பின்னர் உடனடியாக 50 லட்சம், ஒரு கோடி என சம்பளம் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதில் பெரும்பாலான கதாநாயகிகள் அதற்கு முன்பு இரண்டு மூன்று படங்களில் நடித்துவிட்டு பின் ரஜினி படத்திற்கு கதாநாயகியாக வரும்போது இது போன்று நடந்து கொள்வார்கள்.
ஆனால் நடிகை கௌதமி மட்டும் இதற்கு விதிவிலக்கு. காரணம் அவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தில் தான். அந்த படத்திற்காக தெலுங்கில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர், நடித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே. ராமராஜனுடன் இணைந்து நம்ம ஊரு நாயகன் படத்திற்க்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ரஜினிகாந்த் தான் அந்த படத்தின் தயாரிப்பாளர், யார் கண்ணன் என்பவருக்காக கௌதமியை தாராளமாக ராமராஜன் படத்தில் நடி என்று சொல்லி சிபாரிசு செய்துள்ளார். அந்த சமயத்தில் குரு சிஷ்யன் படத்திற்காக கௌதமிக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ அதில் பத்தில் ஒன்பது பங்கு குறைத்து ஒரு பங்கு சம்பளமே தான் ராமராஜன் படத்திற்காக கொடுக்கப்பட்டதாம்.
ஆனாலும் கௌதமி அதுபற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமல் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டாராம். காரணம் ரஜினி படமும் அப்போது படப்பிடிப்பில் இருந்து இன்னும் வெளியாகாத சமயம் என்பதால், அவரால் சம்பளத்தை கூட்டி கேட்க முடியவில்லை. இதே குரு சிஷ்யன் வெளியாகி இருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளரான யார் கண்ணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.